தற்போதைய செய்திகள்

ரஷ்யாவின் அடிமடியில் கை வைத்த அமெரிக்கா.. வாய்ப்பை கச்சிதமாக பிடித்த இந்தியா

தந்தி டிவி

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெருமளவு ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இந்த அளவு 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு. சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியா, எரிபொருள் உட்பட பல பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முதன்மையான இடத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது ரஷ்யா.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடைவிதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா, தன் நாட்டு கச்சா எண்ணெய்யை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. அதுவரையில், ரஷ்யாவிடமிருந்து 2% அளவிலேயே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவந்த இந்தியா, ரஷ்யாவின் சலுகை விலை அறிவிப்புக்குப் பிறகு அந்நாட்டிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது ஈராக், சவூதி அரேபியாவை விட ரஷ்யாவிடமிருந்து அதிகஅளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது இந்தியா . தற்போது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு 45 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கினறன. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 19 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.இது ஏப்ரல் மாதத்தை விட 15 சதவீதம் அதிகம் ஆகும். அதே சமயம், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC, இந்தியாவின் இறக்குமதியில் 39 சதவீதமாக சரிந்த்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீத பங்களிப்பை OPEC வழங்கி வந்தது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக ரஷ்யா சலுகை விலையில் சச்சா எண்ணெய் வழங்க துவங்கியதே OPEC இன் வணிக இழப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர, கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் ஈராக்கில் இருந்தும் 2 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் 1லட்சத்து 38 ஆயிரம் பீப்பாய்கள் அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்தது இந்தியா.அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று அதன் நட்பு நாடுகள் பல, ரஷ்யாவிடம் வர்த்தக தொடர்பை முறித்துக்கொண்ட நிலையில் அமெரிக்காவிடம் மிகுந்த நட்பு பாராட்டி வரும் இந்தியாவோ ரஷ்யாவிடமும் பல ஆண்டுகளாக நட்புறவை தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்காவின் கருத்தை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் தான் உக்ரைன் உடனான போர் சூழலிலும் இந்தியாவுடனான பல ஆண்டு வர்த்தக தொடர்பை வலுவாக பிடித்துக் கொள்வதில் கவனம் கொண்டுள்ள ரஷ்யா அதில் வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்