தற்போதைய செய்திகள்

பெண்ணைக் கொன்று இதயத்தை வெட்டி.. உருளைகிழங்குடன் சமைத்து சாப்பிட்ட கொடூர கொலைகாரன்!

தந்தி டிவி
• அமெரிக்காவின் Oklahoma மாகாணத்தில், கடந்த 2021ம் ஆண்டு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. • போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் என்பவர், வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த சம்பவத்தை நடத்தியுள்ளார். • வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகக் கருதிய பால் ஆண்டர்சன், மனித இதயத்தை வைத்து பரிகாரம் செய்தால், கெட்டது விலகும் என புத்தகம் ஒன்றில் படித்துள்ளார். • அதனை நம்பிய அவர், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 41 வயதான ஆண்ட்ரியா பிளாக்கென்ஷிப் என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். • அப்போது தடுக்க முயன்ற ஆண்ட்ரியாவின் தந்தை மற்றும் 4 வயது மகனையும் கொலை செய்துள்ளார். • பின்னர், ஆண்ட்ரியாவின் இதயத்தை தனியாக வெட்டி எடுத்து, ஆண்டர்சன் பரிகாரம் செய்துள்ளார். • அதனைத் தொடர்ந்து, இதயத்தை வெட்டி, அதன் மேல் மசாலா மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளார். • ஆண்டர்சனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பிணையில் வெளியே வரமுடியாத நிலையில், வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே