தற்போதைய செய்திகள்

விபத்தில் துண்டான பெண்ணின் கை.. உயிருக்கு 2 மணி நேரம் கெடு.. 1 மணி நேரத்தில் காப்பாற்றிய கடவுள்

தந்தி டிவி

விபத்தில் துண்டான பெண்ணின் கை.. உயிருக்கு 2 மணி நேரம் விதிக்கப்பட்ட கெடு.. சரியாக 1 மணி நேரத்தில் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்..!

தஞ்சை, பட்டுக்கோட்டையில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டான அவரது கையை, திருச்சி மருத்துவமனைக்கு ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தஞ்சை மாவட்டம் உலையகுன்னம் பகுதியில் 2 டாட்டா ஏஸ் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் இந்திராணி என்ற பெண்ணுக்கு ஒரு கை துண்டான நிலையில், 2 மணி நேரத்திற்குள் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அவரை காப்பாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசிக் அகமது என்பவர், காயமடைந்த பெண் மற்றும் அவரது கையை, திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

100 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருச்சி செல்ல இரண்டரை மணி நேரம் தேவைப்படும் பட்சத்தில் ராசிக் அகமது, ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்தில் சென்றுள்ளார்.

அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓட்டுநர் ராசிக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்