தற்போதைய செய்திகள்

குளிருக்கு நடுவே சிக்கிய தமிழக பயணிகள் கரையும் கையிருப்புகள் ஆபத்தில் முடிந்த அமர்நாத் யாத்திரை...

தந்தி டிவி

அமர்நாத்திற்கு யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 21 யாத்திரீகர்கள் பனிமலை நிலசரிவில் சிக்கி தவிக்கும் நிலையில் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டி வீடியோ மூலமாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 21 நபர்கள் ஜூலை 4 ஆம் தேதி காஷ்மீர் அமர்நாத் கோயில் லிங்கம் புனித யாத்திரைக்கு சென்னையில் இருந்து சென்றுள்ளனர். பின்னர் அமர்நாத் கோயிலின் பனி மலையில் உள்ள லிங்கத்தை வணங்கிவிட்டு நடந்தே பால்டால் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர். பிறகு அங்கிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட போது பனி நிலசரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பயணத்தை தவிர்க்குமாறும் சி.ஆர் பி.எப் வீரர்கள்அவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த நான்கு நாட்களாக அத்திவாசிய தேவைகள் இல்லாமல் சிக்கி தவிப்பதாககவும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யாத்ரீகர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வீடியோ வாயிலாக கோரிக்கையை வைத்துள்ளனர்.

DMK-Congress Alliance தொகுதிகள் ஒதுக்கிய பின்பும்.. காங்கிரஸ் செயலால் மீண்டும் பரபரப்பு

Anna University | அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் புகார்.. பேராசிரியர் மீது பாய்ந்த நிர்வாகம்

TTV Dhinakaran || AMMK || அமமுக வேட்பாளர்கள் பட்டியல்? TTV தினகரன் கொடுத்த முக்கிய அப்டேட்

TN Election 2026 |முக்கிய தலைவர் பரபரப்பு அறிவிப்பு - தமிழகத்தில் 7 முனை போட்டி?

Nainar Nagendran | Annamalai | தொகுதி மாறினார் நயினார்.. அண்ணாமலை எங்கே?