தற்போதைய செய்திகள்

"அஜித் பவாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" - ஜிதேந்திர ஆவாத் மனு

தந்தி டிவி

அஜித் பவார் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.மகாராஷ்ட்ராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அஜித் பவார், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். அஜித்பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இந்நிலையில், அஜித்பவார் உட்பட 9 சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜிதேந்திர ஆவாத், சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் ராஹுல் நர்வேக்கர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ