• அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்குமாறு ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது .
• கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
• இந்த தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்துள்ளனர்.