தற்போதைய செய்திகள்

கோயில் அருகே புதிதாக ரெஸ்டோ பார்- அடித்து நொறுக்கிய அதிமுக மாஜி.எம்எல்ஏ -புதுவையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுச்சேரியில் கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கேளிக்கை விடுதியை அதிமுக முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சென்று சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே, பொதுமக்களின் எதிர்ப்பை மீறி புதிதாக ரெஸ்ட்ரோ பார் திறக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் திரண்டு மதுபான பாரின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆண்களும், பெண்களும் உள்ளே புகுந்து நாற்காலிகள் மற்றும் கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசாரிடம், மதுபான பாரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து உயரதிகாரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு