தற்போதைய செய்திகள்

ரஜினி மகள் வீட்டை தொடர்ந்து பிரபல பாடகர் வீட்டிலும் வேலைக்காரரே காட்டிய கைவரிசை

தந்தி டிவி

தேசிய விருது மற்றும் பல முறை பிலிம்ஃபேர் விருது வென்ற பிரபல பாலிவுட் பின்னணி பாடகராக வலம் வருபவர் சோனு நிகம். இவரது தந்தை மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் மர லாக்கரில் வைக்கப்பட்ட 72 லட்ச ரூபாய் திடீரென்று காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, சம்பந்தப்பட்ட இரண்டு நாட்களிலும், அவர்களது வீட்டிற்கும் அவர்களிடம் வேலை பார்த்த முன்னாள் ஓட்டுனர் ரேஹன் வந்து சென்றது தெரியவந்தது. சுமார் எட்டு ஆண்டுகளாக சோனு நிகமின் தந்தையிடம் ஓட்டுனராக பணியாற்றி வந்த ரேஹன், சமீபத்தில் தான் அவர் பணியில் இருந்து நீக்கியிருந்தார். இந்நிலையில், தற்போது சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு ரேஹன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்