தற்போதைய செய்திகள்

"ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும்" ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் உண்ணாவிரத போராட்டம்

தந்தி டிவி

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த 500க்கும் மேற்பட்டோர், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வை முடித்தவர்கள் மறு நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணியில் சேர முடியும் என்று கொண்டு வரப்பட்ட அரசாணையை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்