தற்போதைய செய்திகள்

"என் மீது ஆசிட் வீசுவார்களோ என அச்சம்" - கங்கனா ரணாவத்

தந்தி டிவி

தன் மீது யாரேனும் ஆசிட் வீசுவார்களோ என்ற அச்சத்துடன் முகத்தை மூடிக் கொண்டு சாலையில் சென்றதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆசிட் வீச்சை தடுக்க கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில், 17 வயதாக இருந்த தனது சகோதரி மீது சாலையில் சென்ற ஒருவன் ஆசிட் வீசியதாகவும், கண் மற்றும் மார்பு பகுதியில் பாதிக்கப்பட்டதால், தனது சகோதரிக்கு 52 அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மன உளைச்சலாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட சகோதரியை தேற்றுவது மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய கங்கனா ரணாவத், தன் மீதும் யாராவது ஆசிட் வீசுவார்களோ என அச்சத்துடன் முகத்தை மூடி கொண்டு சென்றதாக கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், ஆசிட் வீசும் கொடுமை தொடர்ந்து கொண்டிருப்பதால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை