தற்போதைய செய்திகள்

"ஆப்கனில் மாணவிகளை தேர்வெழுத அனுமதிக்க‌க் கூடாது" பல்கலைக்கழகங்களுக்கு தாலிபன்கள் உத்தரவு

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் மாணவிகளை நுழைவுத் தேர்வை எழுத அனுமதிக்க‌க் கூடாது என தாலிபன்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் மாணவிகளை அனுமதிக்க‌க் கூடாது என பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

முன்னதாக, ஒருநாள் முன்பாக, தொண்டு அமைப்புகளில் பெண்கள் பணிபுரிய, தாலிபன் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்