தற்போதைய செய்திகள்

ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தந்தி டிவி

ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி பெங்களூருவில் இன்று தொடங்கி வைக்கிறார்.

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி என அழைக்கப்படும் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி, இன்று தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை, பெங்களூரு விமானப்படைத்தளத்தில் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கண்காட்சியை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தொடங்கி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், ஏரோ இந்தியா 2023 கண்காட்சியை முதன் முறையாக பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

வழக்கமாக பாதுகாப்புத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் வருகை குறித்து பல்வேறு கருத்துக்களும் சர்ச்சைகளும் பதிவாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்