தற்போதைய செய்திகள்

மீண்டெழும் அதானி குழுமம்... கடன்களை செலுத்தியதால் உயரும் பங்குகள்

தந்தி டிவி
• 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தியுள்ளது. • ஜனவரி 24இல் வெளியான ஹிண்டனர்பர்க் அறிக்கையினால், அதானி குழும பங்கு விலைகள் 60 சதவீதம் வரை சரிந்தால், முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. • அதானி குழுமத்தின் மொத்த கடன் சுமை ஜனவரியில் 2.21 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், 21 ஆயிரத்து 690 கோடி ரூபாய் அளவிலான கடன்களை அதானி குழுமம் முன்கூட்டியே செலுத்தி, அதற்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்ட பங்குகளை மீட்டுள்ளது. • இதில் அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த பெறப்பட்ட 4 ஆயிரத்து 90 கோடி ரூபாய் கடன்களுன் அடங்கும். அதானி குழுமம் கடந்த மாதத்தில் இரண்டு கட்டமாக 16 ஆயிரத்து 577 கோடி ரூபாய் அளவிலான கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. • இதன் விளைவாக மார்ச் 10 நிலவரப்படி, அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 9.3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. • இன்று அதானி குழும பங்கு விலைகள் 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே