தற்போதைய செய்திகள்

நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜராக உத்தரவு

தந்தி டிவி

கடந்த 2021 -ல் ஜூலை 21-ம் தேதி மூன்று நண்பர்களுடன் சென்னை வரும் வழியில், மாமல்லபுரம் அருகே அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவனி செட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கின் மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி அவரை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார்.

OPS || CM Stalin || CM-ஐ சந்தித்த பின் OPS சொன்ன `ஒரு’ வார்த்தை.. தமிழக அரசியல் போக்கே மாறியது..!

CM Stalin | OPS | பல திருப்பங்களுடன் நிறைவடைந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்..

CM Stalin | OPS | உச்சகட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்சட்டென மீடியா முன் வந்து CM சொன்ன வார்த்தை

🔴LIVE: OPS | DMK | திமுகவுடன் கூட்டணியா..? OPS பரபரப்பு பிரஸ்மீட்

CM Stalin | OPS | பேரவையில் OPS கொடுத்த மாஸ் ரியாக்‌ஷன்.. "திமுகவுடன் உறுதி"