திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் சுவாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் ஆரம்பித்து தற்போது அதனுடைய புரமோ வைரலாகி வரும் நிலையில் அவரது தாயார் திருப்பதி ஏழுமலையான் கோவில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.