தற்போதைய செய்திகள்

“பிக்பாஸில் இருந்து வெளியே வந்தபின் தவறான வழியில் பருத்துவீரன் நடிகர் சரவணன்“ - பகீர் கிளப்பிய மனைவி

தந்தி டிவி

திரைப்பட நடிகர் சரவணன் தன்னை மிரட்டி வருவதாகவும், தான் வாங்கிய வீட்டில் இருந்து தன்னை வெளியே போக சொல்வதாகவும், அவரது மனைவி முதலமைச்சர் தனிப்பிரிவில் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

பருத்தி வீரன் திரைப்படத்தில் சித்தப்பாவாக நடித்து புகழ் பெற்றவர் சரவணன். இவரது மனைவி சூரியஸ்ரீ தலைமைச் செயலகத்தில் உள்ள முதலைமைச்சர் தனி பிரிவில் சரவணன் மீது பரபரப்பு புகார் அளித்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காதலித்து தன்னை திருமணம் செய்து கொண்ட சரவணன், சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் தான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து வீடு வாங்கினார். வாங்கிய வீட்டை அவரது பெயரில் பதிவு செய்து கொண்டதாக தெரிவித்தார்.பட வாய்ப்பு இல்லாத போது, தனது சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.பிக்பாஸ் சென்று வந்த பிறகு கையில் பணம் வந்தவுடன், ஸ்ரீதேவி என்ற பெண்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறினார். கடந்த சில நாட்களாக சரவணன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுவதாக தெரிவித்தார். மேலும் 30 அடி ஆட்களுடன் வந்து மிரட்டுவதாகவும், இது தொடர்பாக அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்