தற்போதைய செய்திகள்

"இனி ராஜ்கிரணுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" - வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா பேட்டி

தந்தி டிவி

வளர்ப்பு மகள் திருமண விவகாரத்தில், நடிகர் ராஜ்கிரணின் மனைவி, முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இ

தனிடையே, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் முனீஸ்ராஜ் மற்றும் ஜீனத்பிரியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நடிகர் ராஜ்கிரணின் மனைவி கதீஜா புகார் அளித்தார்.

இதுதொடர்பாக முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ராஜ்கிரணின் மனைவி கதீஜா மற்றும் ஜீனத்பிரியா தரப்பினர் ஆஜராகி விளக்கமளித்தனர்.

அப்போது, சமூக வலைதளங்கள் வாயிலாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்யக்கூடாது, பிரச்சினை ஏற்படுமாயின் காவல்துறை அல்லது நீதிமன்றங்கள் வாயிலாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்டவை போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரும் போலீசாரின் அறிவுரைப்படி செயல்படுவதாக எழுதி கொடுத்துவிட்டு சென்றனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’