தற்போதைய செய்திகள்

தேர்வு முறைகேடு... அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அதிரடி நடவடிக்கை!

தந்தி டிவி

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லலிதா உள்ளிட்ட சிண்டிகேட் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிண்டிகேட் குழுவின் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சிண்டிகேட் உறுப்பினர்கள் மாற்றத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளில் தொடர்புடைய 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பதவி உயர்வு குறைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் மற்றொருவருக்கு பண பலன்கள் 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் படிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்து அல்லது திருமணம் செய்து கொண்டு சென்றது போன்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பாதியில் நின்ற 168 மாணவர்களை மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் படிப்பதற்கு அவர்கள் அளித்த கடிதங்களின் உண்மை தன்மையை குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்