தற்போதைய செய்திகள்

குழந்தை விற்பனை வழக்கில் அதிரடி - 6 பேரை கைது செய்த போலீசார்...

தந்தி டிவி

குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் 6 பேரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. திருமணமாகாத இவர் கர்ப்பமடைந்த நிலையில் தனக்கு தெரிந்தவரான வழக்கறிஞர் பிரபு என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என பிரபு ஜானகியிடம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் மருத்துவமனையில் ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து பிரவுபும் அவரது மனைவி சண்முகவள்ளியும் குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

ஆனால், ஜானகியிடம் குழந்தையை 1 லட்ச ரூபாய்க்கு விற்றதாக கூறி தாங்கள் 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

பின்னர், குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததை அறிந்த ஜானகி, குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜானகியின் விருப்பத்தின் பேரில் குழந்தை விற்கப்பட்டதை போலீசார் அறிந்தனர்.

இதையடுத்து குழந்தையை விற்றதில், பிரபு அவரது மனைவி சண்முகவள்ளி, ஆகாஷ், புரோக்கர் கவிதா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லியில் உள்ள குழந்தை கடத்தல் கும்பல் தலைவன் கோபிநாத் மூலமாக கந்ராடகா மாநிலத்தைச் சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவருக்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.

இவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். தற்போது மீட்கப்பட்ட குழந்தை, பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை