தற்போதைய செய்திகள்

பள்ளியில் மாணவனுக்கு பட்ட ஆசிட்..மூச்சு விடுவதில் சிக்கல்...பள்ளி மீது பாய்ந்த நடவடிக்கை

தந்தி டிவி

சிதம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் அமிலத்தால் பாதிக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 12 வகுப்பு பயின்று வருபவர் அப்துல் ஹமீது. சில நாட்களுக்கு முன்பு, பள்ளியின் அறிவியல் ஆய்வகத்தின் மேஜையில் சிந்தியிருந்த அமிலம், அப்துல் ஹமீது மீது பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு வாந்தி- மயக்கம், உடல் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அமிலம் பட்டதன் காரணமாக சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவனின் தந்தை போலீசாரிடம் புகாரளித்திருந்த நிலையில், பள்ளியில் ஆய்வு செய்த போலீசார், பள்ளி நிர்வாகத்தின் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்