தற்போதைய செய்திகள்

ஸ்டேசன் மாஸ்டரின் கவனக்குறைவால் விபத்து? - முன்னாள் ஐஜி பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

ஒடிசா ரயில் விபத்திற்கு, சிக்னலை முறையாக கவனிக்காமல் ரயிலை அனுமதித்த ஸ்டேஷன் மாஸ்டரே காரணம் என முன்னாள் ஐஜி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்...

தடம்புரண்டு சிதறிய பெட்டிகள்... அலறி துடித்த பயணிகள்...

ரயில் பெட்டிக்குள் மூச்சுத்திணறலாலும், விபத்து காயங்களாலும் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த ஒடிசா ரயில் விபத்து இந்தியாவையே புரட்டிப்போட்டுள்ளது...

"லூப் மாறாததால் சரக்கு ரயில் அங்கேயே நின்று கொண்டுள்ளது"

"தவறான சிக்னலினால் சரக்கு ரயில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ்"

"சரக்கு ரயில் மீது மோதி அடுத்தடுத்து கோர விபத்து"

லூப் மாறாததால் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது தவறான சிக்னலினால் மாறி வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸூம், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸூம் மோதியதில் ரயில் பெட்டிகள் சிதறி விபத்து நடந்துள்ளது...

"சிக்னல் போடும்போது லூப் மாறாததை ஊழியர் கவனிக்கவில்லை"

"அதனாலேயே விபத்து ஏற்பட்டு, அதிக உயிர்சேதம்"

சிக்னல் டெக்னாலஜி, ட்ராக் டெக்னாலஜி என டெக்னாலஜியை வளர்க்க வேண்டுமென வலியுறுத்தும் மாசானமுத்து, ரயில் எங்கே வருகிறதெனவும், சிக்னலின் நிலை குறித்து தெளிவில்லாமல் இருந்த ஸ்டேஷன் மாஸ்டரின் கவனக்குறைவாலேயே விபத்து நிகழ்ந்திருக்கிறது என குறிப்பிட்டார்.

"சிக்னல், ட்ராக் டெக்னாலஜியை வளரச் செய்ய வேண்டும்"

"ஸ்டேசன் மாஸ்டரின் கவனக்குறைவாலேயே விபத்து"

"ரயில் எங்கே வருகிறதெனவும், சிக்னலின் நிலை குறித்தும் தெளிவில்லை"

"ரயில் பயணிகளுடன் மருத்துவக் குழு இணைந்து பயணிக்க வேண்டும்"

பட்ஜெட்டில் ரயில்வேக்கென போதிய நிதி ஒதுக்காததும், இது போன்ற விபத்துக்கு ஒருவகையான காரணம் என குறிப்பிடுகிறார்....

முதலும், முடிவுமாகவும் இந்த ரயில் விபத்து இருக்க வேண்டுமெனவும், இது போன்ற கோர விபத்துகளும், அப்பாவி மக்களை இழப்பதும் இதுவே கடைசியாக இருக்க வேண்டுமென்பதே பலரது எதிர்பார்ப்பாகவும், வேண்டுதலாகவும் இருக்கிறது....

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்