தற்போதைய செய்திகள்

அதிகமாக ஆப்சென்ட் ஆனால் அபராதம்.. கல்லூரி மாணவர்களுக்கு உத்தரவு

தந்தி டிவி
• ஒரு பருவத்தில் 85 சதவீதம் வருகை புரியாத மாணவர்களுக்கு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. • தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், வரும் மே மற்றும் ஜீன் மாதங்களில் நடைபெறும் முதல் பருவத்தேர்வில், சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். • இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. • அதில் குறைந்தபட்ச வருகைப்பதிவேடு இல்லாத மாணவர்களின் விவரங்களை, வரும் 6ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. • மேலும் அனைத்து மாணவர்களும் 85 சதவீதம் வருகை புரிய வேண்டும் எனவும், 75 முதல் 84 சதவீதம் வரை வருகைப் பதிவு உள்ள மாணவர்களை, மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. • ஆனால் வருகைப்பதிவு குறைந்ததற்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்