டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் அஞ்சலி , இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது மது போதையில் இருந்ததாக, அவரது சக தோழி நிதி, புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இளம்பெண் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான நிலையில் அஞ்சலியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், உயிரிழந்த அஞ்சலியின் தோழி நிதி, செய்தியாளர்களிடம் பேசிய போது, விபத்து நிகழ்ந்த போது தாமும் உடன் பயணித்ததாகவும், அஞ்சலி மது போதையில் இருந்ததாக கூறியுள்ளார். காரில் அடிப்பட்ட நேரத்தில் தாம் கீழே விழுந்ததாகவும், பின்னர் அங்கிருந்து ஓடி தமது வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளம்பெண்ணின் தோழி நிதி, கூறிய புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.