தற்போதைய செய்திகள்

தகாத உறவில் இருந்த மனைவி...மீண்டும் கணவருடன் சென்ற காதலி - ஆத்திரத்தில் காதலியின் மகனை கொன்ற காதலன்

தந்தி டிவி
• தகாத உறவில் தகராறு ஏற்பட்டு மீண்டும் தனது கணவருடனே வந்து வாழ்ந்த பெண்ணின் 17 வயது மகனை, காதலன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. • .சென்னை, விருகம்பாக்கம் அருகே தாங்கல் ஏரிக்கரையை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவருக்கு தனலட்சுமி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில், தனலட்சுமிக்கு வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. • இதனால், கணவரை பிரிந்த தனலட்சுமி கார்த்திக்குடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. • இந்நிலையில், தகாத உறவில் திடீரென தகராறு ஏற்படவே, கார்த்திக்கை விட்டு பிரிந்த தனலட்சுமி, மீண்டும் தன் கணவரிடமே திரும்பி வந்துள்ளார். • இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக் தனலட்சுமியை அழைத்து வர அவரது கணவரின் வீட்டுக்கு சென்ற போது, தனலட்சுமியின் 17 வயது மகனுக்கு, கார்த்திக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. • இதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுவனை குத்தி விட்டு கார்த்திக் தப்பியோடியுள்ளார். • இதில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கார்த்திக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்