தற்போதைய செய்திகள்

திடீரென 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய கிணறு - பீதியில் கலங்கி இருக்கும் மக்கள்

தந்தி டிவி

ஆம்பூர் அருகே தொடர் மழையால் கிணறு ஒன்று 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், இந்த கிணறு சுமார் 60 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இத்தகவலறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கிணற்றை சுற்றியுள்ள 2 வீடுகளும் சரிந்து கிணற்றில் விழும் அபாயம் உள்ளதால், அங்கு வசிப்பவர்களை வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் கிணற்றில் விழும் அபாயம் இருப்பதால், அவற்றை அகற்றி விட்டு கிணற்றை முழுவதும் மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்