தற்போதைய செய்திகள்

உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி... நிலத்தை ஆக்கிரமித்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் நபரை, உயிரிழந்ததாகக் கூறி போலி இறப்பு சான்றிதழ் மூலம், நில ஆக்கிரமிப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நாமக்கல் மாவட்டம், கூனம்வேலம்பட்டி புதூரில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஊர் பெரியவர்கள் 8 பேர் பெயரில், நிலம் வாங்கப்பட்டுள்ளது. அதில் அப்பகுதியினர் தறி தொழில் நடத்தி வந்தனர். நிலம் வாங்கியவர்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில், சுப்புலெட்சுமி என்ற மூதாட்டி மட்டும் உயிருடன் உள்ளார். இந்நிலையில், அவரும் உயிரிழந்து விட்டதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நடராஜன், முருகேசன், திருநாவுக்கரசு ஆகியோர் போலி இறப்பு சான்றிதழ் மூலம் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறி, சம்பந்தப்பட்ட மூதாட்டியுடன் ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்