கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் மற்றும் காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் செட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பெங்களூருவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிவில்லியர்ஸை, ரிஷப் செட்டி வியாழனன்று சந்தித்துள்ளார். காந்தாரா படத்தை பிரபலப்படுத்தும் விதமாக அவருடன் இணைந்து ரிஷப் செட்டி பேசி பகிர்ந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.