தற்போதைய செய்திகள்

பட்டியல் இனத்தவர் புதிதாக கட்டிய வீட்டை இடித்து தள்ளிய வேறு சமூகத்து நபர் - தர்மபுரியில் பரபரப்பு

தந்தி டிவி

காரிமங்கலம் அருகே தெல்லனஅள்ளி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர், அந்த கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே புதிதாக வீட்டு மனை வாங்கி வீடு கட்டி வருகிறார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், வேறு சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிது, ரியல் எஸ்டேட் தரகர் முனுசாமி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனாலும், வீடு கட்டும் பணியை வேல்முருகன் தொடர்ந்ததால் கோபமடைந்த முனுசாமி, நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்டோருடன் ஜே.சி.பி.எந்திரத்தை எடுத்துச் சென்று, புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் ஒரு பகுதியை இடித்து தரைமட்டமாக்கினர். சத்தம் கேட்ட வேல்முருகன் அக்கம்பக்கத்தினரை அழைத்து வருவதற்குள் அவர்கள் தப்பியோடி விட்டனர். இகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்