தற்போதைய செய்திகள்

தந்தி டிவி செய்தியின் எதிரொலியாக திறக்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை

தந்தி டிவி

தந்தி செய்தி எதிரொலியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர்

தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள், கிராமத்திற்கு பகுதி நேர ரேசன் கடை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.தோட்டக்கணவாய் கிராம மக்களின் கோரிக்கை தந்தி டிவி செய்தியாக ஒளிபரப்பானது. இதையடுத்து கோரிக்கையை ஏற்று கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. அப்போது, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தந்தி டிவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்