தற்போதைய செய்திகள்

#BREAKING || ராமஜெயம் வழக்கில் புதிய திருப்பம்... வெளியான அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் பட்டியலில் உள்ள திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ்

செந்தில், கலைவாணன், திலீப், சுரேந்தர், சாமிரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து உள்ளிட்ட 12 பேரிடம் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் 21 தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் சோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது

தற்போது இந்த உண்மை கண்டறியும் சோதனை குறித்த அறிக்கையின் விவரங்கள் வெளியாகி உள்ளது

உண்மை கண்டறியும் சோதனையில் பங்குபெற்ற 12 பேரில் 11 பேர் பொய்யான தகவலை உண்மை கண்டறியும் சோதனையில் கூறி இருப்பது தெரியவந்துள்ளது

திலீப் என்ற ஒருவர் மட்டுமே உண்மையை கூறியிருக்கிறார் எனவும் தகவல் வெளிவந்துள்ளது

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே