தற்போதைய செய்திகள்

3 மாதத்தில் 3 முறை நடுரோட்டில் நின்ற புதிய பேட்டரி கார்... கடுப்பாகி உரிமையாளர் செய்த செயல்

தந்தி டிவி

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் ராஜேஷ். இவர், குரோம்பேட்டையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் 21 லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரி காரை மூன்று மாதங்களுக்கு முன்னர் வாங்கியுள்ளார். இந்நிலையில், கார் வாங்கிய மூன்று மாதங்களில் மூன்று முறை வழியில் நின்றதாக கூறப்படுகிறது. மேலும், இன்று காலை ராம் ராஜேஷ் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கார் வழியில் நின்ற நிலையில், சர்வீஸ் சென்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், புகாரளித்து சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னரே காரை எடுத்துச் சென்றதாக குற்றஞ்சாட்டும் ராம் ராஜேஷ், கார் ஷோரூம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, அவருடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு