தற்போதைய செய்திகள்

பிரபல தனியார் கல்லூரி விடுதியில் உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவ மாணவி - கோவையில் அதிர்ச்சி

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சத்திய பிரியா என்பவர், சூலூர் கண்ணம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், நான்காம் ஆண்டு படித்து வந்தார். மதிய உணவுக்காக விடுதிக்கு சென்ற அவர், பின்னர் கல்லூரி வகுப்புக்கு வரவில்லை என, தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த சக மாணவிகள், சத்திய பிரியாவை தேடி, விடுதி அறைக்கு சென்ற போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சூலூர் போலீசார், சத்திய பிரியாவின் உடலை கைபற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்