தற்போதைய செய்திகள்

"இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தும் மாற்றுத்திறனாளி"

தந்தி டிவி

"இரண்டு கைகளையும் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தும் மாற்றுத்திறனாளி" - பீனிக்ஸ் மனிதர் முத்து

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே, இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவர், 17 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி இரு கைகள், இடது கால் விரல்களை இழந்துள்ளார். வறுமையில் தவித்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தன்னம்பிக்கையுடன் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 16 ஆண்டுகளாக செல்போன் பழுது நீக்கம், புதிய செல்போன் விற்பனை, ரீச்சார்ஜ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், கார், வேன், டிராக்டர் உள்ளிட்டவை வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தன்னை போல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என, முத்து கூறியுள்ளார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்