தற்போதைய செய்திகள்

கஞ்சாவுக்கு எதிரான போராடிய நபரை... துடி துடிக்க சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்... நெஞ்சை உறைய வைக்கும் காட்சி

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே, கஞ்சா விற்பனைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட நபரை, கும்பல் ஒன்று, அரிவாளால் சரமாரியாக வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரியில், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி, தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர் பாலகுமரேசன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால், பாலகுமரேசன் மீது கஞ்சா விற்பனை கும்பல் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளது. இதனிடையே, உணவகத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று, அங்கு நின்றிருந்த பாலகுமரேசனை, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது. பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி