கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, இருசக்கர வாகனத்தை திருடிய நபர், அதனை ஓட்டத் தெரியாமல் போலீசிடம் சிக்கிக் கொண்ட சம்பவம், அரங்கேறி உள்ளது. மணலிகரை பகுதியை சேர்ந்த மார்சிலின் என்பவரது இருசக்கர வாகனம் திருடு போன நிலையில், அதனை தள்ளிச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.