தற்போதைய செய்திகள்

இணையத்தில் வைரலான பாசக்கார அப்பா... மகனுக்காக இதை கூட பண்ணலனா எப்படி ?

தந்தி டிவி

இணையத்தில் வைரலான பாசக்கார அப்பா...

மகனுக்காக இதை கூட பண்ணலனா எப்படி ? 

என்னைக்குமே நம்ம முகத்துல சோகத்த பாத்துட கூடாதுனு நினைக்குறது அப்பாக்கள் தான்...

நம்ம சிரிப்புக்காக அவங்க என்ன வேணும்னாலும் செய்யுவாங்க...

அப்படி, தன் புள்ளைங்களோட சந்தோஷத்துக்காக... ஒரு அப்பா பண்ண சம்பவம் தான் இப்போ இன்ஸ்டாகிராம்ல செம்ம வைரலாகிட்டு இருக்கு...

அதாவது இந்த வீடியோவுல... பசங்களா ஒன்னு சேந்து வீட்டு கதவுகிட்ட பேப்பர் கப்ப கோபுரம் மாதிரி அடுக்கி வைக்குறாங்க...

இன்னும் கொஞ்சம் நேரத்துல டோர தொறந்துட்டு அப்பா... உள்ள வருவாரு... அப்போ இந்த கோபுரம் மேல தட்டு தடுமாரி... விழுவாரு... அதை பாத்து பசங்கலாம் வயிறு வலிக்க சிரிக்கனும்... அம்மா இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கனும்... இது தான் பிளான்னே...

ஆனா இங்க நடந்த சோகம் என்னனா... அப்பா இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டாரு போல... கதவ தொறந்த மனுசன்... ஏதோ ஸ்கெட்ச்சு போட்டானுங்கனு சுதாரிச்சுகிட்டாரு... பட் அவருக்கு ஒன்னும் புரியல...

இதை வீடியோ எடுத்துட்டு இருந்த அம்மா... ஏங்க உங்க புள்ளைங்க நீங்க கீழ விழுந்து வாருறதுக்காக பிளான் பண்ணிருக்காங்க அதுக்கு தான் இந்த ஏற்பாடுனு சொன்னதும்...

சே... புள்ளைங்க கஸ்ட்டப்பட்டு பிளான் பண்ணிருக்காங்க...பாவம் ஏமாந்து போயிட கூடதுனு நெனச்ச அப்பா...

சரி... மறுபடியும் நான் வர மாதிரி வந்து விழுறேன் அதுகுள்ள புள்ளைங்கள கூட்டிட்டு வந்து நிக்க வைனு அம்மா கிட்ட சொல்லிட்டு போயிட்டாரு... அம்மாவும் பசங்கள கூப்பிட்டு ரெடியா கதவு முன்னாடி... நின்னு சிரிக்க தயாரகிட்டாங்க...

தடார்னு... கதவ தொரந்த அப்பா.... ஐயோ... அம்மானு தட்டு தடுமாறி கீழ விழுந்துட்டாரு... அப்பா கீழ விழுந்தத பாத்ததும்... பசங்களுக்குலாம் ஒரே சிரிப்பு...

பசங்க முகத்துல சிரிப்ப பாத்ததும் அப்பா முகத்துல அவ்ளோ சந்தோஷம்... தான் கீழ விழுந்தா தான் புள்ளைங்க முகத்துல சிரிப்பு வரும்னா... கண்டிப்பா விழுவேன்னு நினைக்குற இந்த அப்பாக்கள் எப்பவுமே வேற லெவல்ங்க...

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு