தற்போதைய செய்திகள்

தன் யூனிபார்மை தானே தைத்து கொண்ட குட்டி 5ஆம் வகுப்பு மாணவி - உச்சி முகர்ந்து பாராட்டிய அமைச்சர்

தந்தி டிவி

கேரளாவில் தன் பள்ளி சீருடையைத் தானே தைத்துக் கொண்ட 5ம் வகுப்பு மாணவியை அம்மாநில பொதுக் கல்வித்துறை அமைச்சர் வெகுவாக பாராட்டியுள்ளார்... கேரளாவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது. துணியாக வழங்கப்படுவதால் மாணவர்கள் அதை வெளியில் கொடுத்து தைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் அன்னகம்பாடு வேரூர் அரசு பள்ளியை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி அனாமிகா, தனது பள்ளி சீருடையே தானே வெட்டி தையல் இயந்திரத்தில் தைத்துள்ளார். தன் தாயாரின் உதவியுடன் அளவு எடுத்து வெட்டி 2 சீருடைகளையும் 3 நாட்களில் தைத்து முடித்துள்ளார் அனாமிகா. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவிய நிலையில், அம்மாநில பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி அனாமிகாவுக்கு சமூக வலைதளம் வாயிலாக பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்