தற்போதைய செய்திகள்

மகனுக்கு நேர்ந்த கொடுமை, பேரக்குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் பாட்டி... முதல்வருக்கு கண்ணீர் கோரிக்கை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவலக்கம்பட்டியை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் அண்ணாமலை கண் பார்வையை முற்றிலும் இழந்த நிலையில், பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சிகிச்சைக்காக பார்வதி, லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். இதனால் அவரது குடும்பம் தற்போது வறுமையில் சிக்கி தவித்து வருகிறது. இதன்காரணமாக அண்ணாமலையை பாராமரிக்க முடியாமலும், அண்ணாமலையின் 3 குழந்தைகளை வளர்க்க முடியாமலும், பார்வதி தவித்து வருகிறார். அண்ணாமலையின் மூத்த மகள் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், அண்ணாமலைக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை கோரி பலமுறை விண்ணப்பித்தும், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பார்வதி தனது குடும்பத்தினருக்கு உதவக்கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு கண்ணீல் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்