தற்போதைய செய்திகள்

மேல் அதிகாரி திட்டியதால் மயக்கம் போட்ட அரசு ஊழியர்

தந்தி டிவி

சிவகங்கையில் சமூக நலத்துறை அதிகாரி திட்டியதால், செயல் அலுவலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அன்பு குளோரியா. இவர், சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணி புரியும் செயல் அலுவலரான சத்தியபாமாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில், ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்தியபாமா, திடீர் மயக்கம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்சமயம் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க சக ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்