தற்போதைய செய்திகள்

நிற்காமல் சென்ற அரசு பேருந்து.. பைக்கை குறுக்கே விட்டு மறித்த ராணுவ வீரர் - நாங்குநேரியில் பதற்றம்

தந்தி டிவி

 நாங்குநேரி அருகே பேருந்து நிறுத்ததில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் முன், இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கணேசராஜா, நெல்லை செல்வதற்காக பரப்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிற்காமல் சென்றுள்ளது.

இதனால் பேருந்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணேசராஜா, இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் செய்தார்.

தகவலறிந்து விரைந்த போலீசார் பேருந்து ஓட்டுனரை எச்சரித்து, கணேசராஜாவை அதே பேருந்தில் நெல்லைக்கு அனுப்பி வைத்தனர்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது