தற்போதைய செய்திகள்

வீடு வாசலை இழந்த குடும்பம்... பதுங்கு குழியில் குடி இருக்கும் குழந்தை

தந்தி டிவி

வீடு வாசலை இழந்த குடும்பம்... பதுங்கு குழியில் குடி இருக்கும் குழந்தை... பழைய நிலை திரும்பாத என எங்கும் தாய்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், கார்கிவ் நகரில் பிறந்தது முதல் பதுங்கு குழியை தவிர வேறெதுவும் அறியாத ஆறு மாத குழந்தை குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் கூறுகையில், போரினால் தான் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போதே தங்கள் வீட்டை விட்டு வெளியேறி இந்த பதுங்கு குழியில் தஞ்சமடைந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது இருந்து இந்த குடும்பம் இந்த பதுங்கு குழியிலேயே தங்கி வருகிறது. போரினால் உருகுலைத்துவிட்ட தங்கள் வீட்டை மீண்டு கட்டி குடியேறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என வருந்தும் அந்த குடும்பம், என்றாவது ஒருநாள் மீண்டும் தங்கள் வாழ்க்கை பழைய நிலைக்கு திரும்பாதா? என ஏக்கத்துடன் காத்திருக்கிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்