தற்போதைய செய்திகள்

வீட்டு வேலைக்கு வந்த சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

குருகிராமில், வீட்டில் பணியாற்றிய 14 வயது சிறுமியை அடித்தும், பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.குர்கானைச் சேர்ந்த தம்பதி, தனது வீட்டில் வீட்டு வேலை செய்து வந்த 14 வயது சிறுமி, தாக்கப்பட்டதில் காயமடைந்த கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில், அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், காயமடைந்த நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மேற்கொண்ட விசாரணையில், மணிஷ் காத்தர் - கமல்ஜீத் கவுர் தம்பதி, 5 மாதங்களுக்கு முன்பாக, சிறுமியை, வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளனர். பின்னர், சரியாக பணியாற்றவில்லை எனக்கூறி, சிறுமிக்கு சூடு வைத்தும், சரமாரியாக தாக்கியும், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தம்பதியை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்