தற்போதைய செய்திகள்

ஆற்று ஓரத்தில் கொட்டகை - ஜோராக மது விற்பனை செய்யும் சிறுவன் - இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, 11 வயது சிறுவன் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊத்தங்கரை அடுத்த கவுண்டப்பனூர் கிராமத்தின் ஆற்றின் ஓரம், சந்தை கொட்டகை அமைத்து 2 குடும்பங்கள் மது விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில், 11 வயது சிறுவன், மல்லனூர் கிராமத்தில் 5ம் வகுப்பு வரை படித்துவிட்டு, 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் நின்றுள்ளார். இதனை சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட பெற்றோர், இளைஞர் கவுண்டப்பனூர் ஆற்று ஓரத்தில் உள்ள கொட்டகையில் மதுபானம் விற்க சிறுவனை அனுப்பி உள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்