தற்போதைய செய்திகள்

ராகுலின் நடைபயணத்தில் பரபரப்பை கிளப்பும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்

தந்தி டிவி

கர்நாடகாவில் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் இந்தியா ஒற்றுமை நடைப் பயணத்தில் சாவர்க்கர் படத்துடன் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி, தற்போது கர்நாடகாவில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். மண்டியா மாவட்டத்தில் நேற்று, ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொண்டார். நடைப்பயணத்தின்போது, மாவட்டத்தின் சில இடங்களில், காங்கிரஸ் கட்சியினர் வைத்திருந்த பேனர்களில், தலைவர்களின் படங்களுடன் வீர சாவர்க்கரின் படமும் இடம் பெற்றிருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் அந்த பேனர்களை அப்புறப்படுத்தினர். நடை பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே சில சமூக விரோதிகள் அந்த பேனர்களை வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி