தற்போதைய செய்திகள்

திருமணமாகாமல் கர்ப்பமான 17 வயது சிறுமி பிரசவத்தின் போது பலி..சிக்கிய மருத்துவர்..சேலத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சேலம் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர், அவரது உறவினரால் கர்ப்பமடைந்துள்ளார். இதில், சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் போது தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, சிறுமிக்கு பிறந்த குழந்தை உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் போலீசார் விசாரணையில் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்நிலையில், சிறுமிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர் செல்வாம்பாளிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றபோது, அவர் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவர் செல்வாம்பாளை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சிறுமியின் தரப்பினர் புகாரளிக்க முன்வராத நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரின் மீதான நடவடிக்கை கேள்விக்குறியாகியுள்ளது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்