ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமத்தில் வசித்து வருபவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், தான் வசிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரியர் வில்வேந்திரனை போக்சோவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.