தற்போதைய செய்திகள்

குஜராத்தில் ஜூன் 15 வரை 95 ரயில்கள் ரத்து

தந்தி டிவி

பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கில் 340 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள பிபர்ஜாய் புயல், வரும் 15-ஆம் தேதி கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. குஜராத்தில் பிபர்ஜாய் பாதித்த பகுதிகளில், செவ்வாய்க்கிழமை முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடக்கும்போது கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்