விருதுநகரில் அரசு உதவி பெறும் ஆண்கள் பள்ளியில் தை திருநாளை கொண்டாடும் விதமாக மாணவர்கள் நுங்கு வண்டி ஓட்டியும், கில்லி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து போன இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு தை திருநாளை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு கூறும் வகையில் நுங்கு வண்டி, டயர் வண்டி ஓட்டியும், கில்லி விளையாடியும், உறி அடித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.
மேலும் மனதளவிலும் , உடல் அளவிலும் புத்துணர்ச்சி தரும் இந்த விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.