தற்போதைய செய்திகள்

9 லிட்டர் பால்... தன் மடியில் தானே குடிக்கும் அதிசய பசு! - ஆச்சர்யமாக பார்க்கும் மக்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் பசுமாடு ஒன்று, கன்றுக் குட்டிக்கு பாலை கொடுக்காமல் தானே குடித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மங்கலம் கிராமத்தில் சுகுமார் என்ற விவசாயி வளர்த்து வரும் பசுமாடு, ஐந்து மாதங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, நாள் ஒன்றுக்கு 9 லிட்டர் பால் கறந்து வந்த நிலையில், அதன் பிறகு அரை லிட்டர் பால் கூட கறக்க முடியவில்லை. பால் முழுவதையும், கன்று குட்டி குடித்திருக்கலாம் என்று அவர் எண்ணியிருந்தபோது, ஒருநாள் பசு மாடு தனது மடியில் இருந்து வந்த பாலை, தானே குடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கன்றுக் குட்டியையும் அந்த பசுமாடு பால் குடிக்க விடவில்லை. நுண்ணூட்டச் சத்து குறைபாட்டு காரணமாக, பசுமாட்டுக்கு இந்த பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கால்நடை மருத்துவர் கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்