தற்போதைய செய்திகள்

4 பைக்குகளில் வந்த 8 பேர்.. பேனர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

தந்தி டிவி

ஸ்ரீவைகுண்டம் அருகே சமுதாய டிஜிட்டல் போர்டை பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியதால் பரபரப்பு. 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகள் சிசிடிவியில் பதிவு.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த டிஜிட்டல் போர்டை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காலையில் அதை பார்த்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போர்டை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மூலம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதில் 4 பைக்குகளில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சமுதாய போர்டில் பெட்ரோல் குண்டுகளை வீசி அங்கிருந்து தப்பிச் செல்கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதை கைப்பற்றிய போலீசார் 8 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்